தேங்கியூ, தேங்கியூ தேங்கியூ என்று நீங்கள் எழுதிக் கொடுத்தவொன்றை மங்கியூ, மங்கியூ, மங்கியூ என்று யாராவது எழுதினால் கோபம் வருகிறதா? அதேப் போல பல ஆயிரம் வார்த்தைகளுக்கு நடுவே சில இடங்களில் எழுத்தை மாற்றி எழுதி உங்கள் எழுத்தில் கலப்படம் செய்தால் கோபம் வருகிறதா? பத்திரிக்கைக்கு அனுப்பிய படைப்புகளில் கத்திரிக் கோல் விழுந்த இடங்களை கண்டுபிடிக்க வேண்டுமா? ஒரே அறிக்கையை ஒவ்வொரு தேர்தலிலும் வருகிறதாவென ஒப்பிட வேண்டுமா? இதற்கொல்லாம் உதவ வாக்கிய ஒப்பீட்டுச் செயலி அறிமுகமாகியுள்ளது. {தமிழ் என்றில்லை மற்ற மொழிகளுக்கும் இது பயன்படுத்தலாம்.} பொதுவாக ஒரு குறிப்பிட்ட வரிகள் அல்லது குறிப்பிட்ட வாக்கியங்கள் மற்ற ஒரு கட்டுரையில் உள்ளதா என்று பார்க்க எளிதாக ctrl+F செய்து பார்த்துவிடலாம். ஆனால் இரண்டு ஒரே மாதிரியான கட்டுரைகளில் இடையில் விடுபட்ட அல்லது சொருகப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடிக்க அந்தக் கட்டுரை முழுவதையும் படிக்க வேண்டும். எளிதில் கண்டுபிடிக்க இந்த செயலி உதவும், ஒவ்வொரு வார்த்தையாக சோதித்து விடுபட்ட வார்த்தையைக் காட்டிக் கொடுக்கும் வாக்கிய ஒப்பீடு செயலியில் உள்ள இரண்டு பெட்டியில் இரண்டு வாக்கியங்களைக் கொடுத்தால் ஒப்பிட்டு மாறுபட்ட வார்த்தைகளை இரண்டு வாக்கியங்களிருந்தும் சிவப்பு வண்ணத்தில் காட்டும்.
அப்படி போடு போடு போடு... என்கிற பாடல் தமிழ் தெரியாதவர்கள் பலருக்கும் அறிமுகமாயிருக்கும். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் யாரும் இப்பாடலை எழுத்துவடிவில் படிக்கமுடியாது. அதுவே அவர்கள் மொழியில் ಅಪ್ಪಟಿ ಪೋಟು ಪೋಟು ಪೋಟು என்றிருந்தால் எப்படியிருக்கும்? தமிழ் நாட்டிற்கு வேலை நிமிர்த்தமாக வந்து தமிழ் படிக்கத் தெரியாமல் பேசத் தெரிந்தவொரு ஹிந்திக்கார தாய்க்குலத்திற்கு ओरु चेलै वाङ्किनाल् ओरु चेलै इलवचम् என்று இருந்தால் எப்படியிருக்கும்? இதுவெல்லாம் ப்ராட்டிகளாக முடியாதுதான் அட்லீஸ்ட் இணையத்திலாவது இருக்கலாமே! அதற்கான ஒரு செயலி தான் இது Tamil Transliteration இங்கு தமிழ் வாக்கியங்களை வேறு மொழி எழுத்துகளாக மாற்றும். காணப்படும் முதல் பெட்டியில் தமிழ் வாக்கியங்ககளை உள்ளீட்டு செய்து வேண்டிய மொழியினை அழுத்தினால் போதும். அந்தப் பெட்டியில் நேரடியாக தமிழில் தட்டச்சிடவும் வசதியுள்ளது. தற்போதைக்கு ரோமன்[ஆங்கில], தேவநாகரி[இந்தி], மலையாளம், கன்னடம், தெலுகு, சிங்களம்,குஜராத்தி எழுத்துகள் மட்டும் செயல்படுகிறது. வேறு சில மொழி எழுத்துகளுக்கும் மேம்படுத்தப்படலாம். மேற்கூறியவர்கள் யாரேனும் இணையத்தில் வரும் போது இணைய பத்திரிகை மற்றும் உங்கள் பிளாக்கையும் அவர்கள் மொழி எழுத்துக்களால் படிக்கமுடியும். தமிழும் முழுதாகத் தெரியாமல் ஆங்கிலமும் முழுதாகத் தெரியாமல் வளரும் சில மெட்ரிக் பள்ளி மாணவர்களும் இங்கு வந்து தமிழ் கதைகளைப் படிக்கலாம். கடன் கொடுத்த சேட்டு கடைக்காரர்கள் கடனாளியின் தமிழ்ப் பதிவுகளுக்கு "அருமை", "சூப்பர்" என்று பின்னூட்டம் இட்டு வட்டி வாங்கலாம். வேற்று மொழியில் தங்கள் பெயர்களை எழுதி எலக்சனில் நிற்கலாம். இறுதியாக தமிழ் படிக்க எழுத்துகள்[script] தடையில்லை என்று கொள்ளலாம். விமர்சனமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகிறது