தினத்தந்தியின் கன்னித்தீவை படித்துக் கொண்டிருக்கும் போது சிறுவர்மலரின் அதிமேதாவி அங்குராசு கதைக்கு தாவியாரா? ஹாய் மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசு பதிலுக்கு சிரித்ததுண்டா? தினமணியின் தலையங்கத்தைப் படிக்கையில் தினமலரின் டீ கடை பெஞ்சுக்கு போனதுண்டா? அடுத்தவர் அந்த பேப்பரை படித்து முடிக்கும் வரை இந்த பேப்பரில் உள்ள கண்ணீர் அஞ்சலில் படத்தையே மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களை படிப்பகங்களின் பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் உலகமே உங்களுக்கு லெட்டர் போட்ட பிரமையை உருவாக்குவது படிப்பகங்கள். திருவிழாக்காலத்திலும் திருகு குழாய் பிரச்சனை காலத்திலும் எல்லா பத்திரிகை செய்திகளையும் ஒரே இடத்திலிருந்தவாறு படிக்கும் சுகமே தனி. பெரும்பாலோர் நூலகங்களில் அனுபவித்திருக்கலாம், சிலர் மரத்தடி பதிப்பகங்களில் அனுபவித்திருக்கலாம். அத்தகைய ஒரு அனுபவத்தை இணையத்தில் தரமுடியாது இருப்பினும் ஓரளவு அதன் பயனை விரும்புகிறவர்களுக்காக இணைய பத்திரிகைகள் பலவற்றை ஒரே இடத்தில் தொகுக்கப் பட்டுள்ளது.

தமிழ்ப்புள்ளி படிப்பகம்11000 தமிழ்த் தளங்களிலிருந்து இணையத்தில் இலவசமாகவுள்ள தமிழ் பத்திரிகைகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தவாறே செய்தி ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகள் படிக்கலாம். தெரியாத புதிய தமிழ் செய்தித் தளங்களை அறிந்து கொள்ளலாம். 

இணையத்தில் செய்தி ஊடகமாக பிகடனப் படுத்திய பிரபலத் தளங்கள் இணைய செய்தி ஊடங்கள் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் செய்தி வலைதளங்கள் மற்றும் இ-பேப்பர் தளங்ககளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுபோல இணைய மற்றும் அச்சு சஞ்சிகைகளின் தளங்களும் பதிக்கப்பட்டுள்ளது. 
சில தளங்களில் பதிவு செய்து கொண்டு எல்லா பக்கங்களையும் இலவசமாகப் படிக்கும் படியுள்ளது. சில தளங்களின் பதிவு செய்துகொண்டு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இலவசமாகப் படிக்கும் படியும் உள்ளது. முழுதும் கட்டணத் தளங்களாக உள்ளவைகள் சேகரிக்கப்படவில்லை. புதிய தளங்கள் காணப்பட்டால் இணைத்தும் செயல் படாத தளங்கள் தவிர்க்கப்பட்டும் இப்படிப்பகம் செயல்படும்.