Help page
உதவிப்பக்கம்


அதிகமான தமிழ் திரட்டிகளை கொண்டுள்ள பதிவுலகில் எளிதில் அவற்றைப் படிக்கவும் பகிரவும் இந்தப் பக்கம் உதவும். வேண்டிய திரட்டிகளுக்குச் செல்ல அப்பக்கத்தில் உள்ள பட இலச்சினைகளை சொடுக்குவதன் மூலம் அந்த திரட்டிகளை இப்பக்கத்திலிருந்து பயன்படுத்தலாம்.

தமிழ் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என ஒரு படிப்பகத்தில் படிக்கும் அனுபவத்தைத் தரும் ஒரு சிறிய முயற்சி. இணைய செய்தித் தாள்கள் மற்றும் சஞ்சிகைகள் எல்லாம் ஓரிடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தே வேண்டியவற்றைப் படிக்கலாம். விடுபட்டவற்றை சுட்டிக் காட்டலாம்.

இதன் மூலம் தான்தோன்றித்தனமாக பல கோலங்களி உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை, வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம்.

இதன் மூலம் தமிழக நாட்டார் விளையாட்டான ஆடு புலி ஆட்டத்தை இணையத்தில் விளையாடலாம். கணினியுடனும் நண்பர்களுடனும் இதன் மூலம் விளையாடலாம். கணினியுடன் விளையாடி வெல்வது அரிதே!

தமிழ் எழுத்துருக்களை ஒரே ஒலிப்புடைய வேறு மொழி எழுத்துருக்களாக மாற்றும் மென்செயலி. தமிழ் வாசிக்க எழுத்துரு ஒரு தடையாக இருக்கவேண்டாம் என நினைப்பவர்கள் முக்கிய INDIC மொழியின எழுத்துருக்களாக இங்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஒரே மாதிரியிருக்க வேண்டிய இரண்டு வாக்கியங்கள் அல்லது இரண்டு பெரிய கட்டுரைகளை இங்கு கொடுத்து சோதித்துக் கொள்ளலாம். விடுபட்ட வார்த்தைகள், வேறுபட்ட வரிகள் ஏதேனும் இருந்தால் இச்செயலி சுட்டிக்காட்டும். அனைத்து மொழியையும் பயன்படுத்தலாம். மென்நிரல்கள்[S/W code] ஒப்பிட்டும் பார்க்கலாம்.

நாளும் வளர்ந்துவரும் பதிவுலக வலைப்பூக்கள் பற்றிய தொகுப்புக்கள். ஆரம்பத்தில் சுமார் 7000 வலைப்பூக்களுடன் இன்னபிற தகவலும் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசகர்களும் புதிய புதிய தளங்களை தந்து வர வசதியுள்ளதால உங்கள் விருப்ப வலைப் பூக்களை தேர்வு செய்யலாம்.

தமிழ் எழுத்துகளில் ASCII வடிவங்களை நிரப்பி புதுமையாக எழுதும் மின் செயலி. உள்கண்ட பட்டன்களை அழுத்தி வேண்டிய வாக்கியங்களைப் பெறலாம். வாழ்த்து/வரவேற்பு அட்டைகளில் எழுத, வலைப்பூக்கள்/சமூக தளங்களில் மறுமொழிகளிட, மின்னஞ்சல்/வேர்ட் டாக்குமென்ட் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.

ப்ளாக்கர்களுக்கு பயன்படும் கருவிகள் சில தொகுக்கப்பட்டுள்ளது. ஒரு வலைத்தளத்தின் வரலாறு, வலைத்தளத்தின்[பிளாக்ஸ்பாட்] மறுமொழிப் பக்கம், ஒரு தள மறுமொழிகள் திரட்ட, மேலும் பதிவர்களுக்குப் பயன்படும் தமிழ் செயலிகள் மற்றும் மென் உபகரணங்கள் உள்ளன.

ஒரே இடத்திலிருந்து ஒரு பதிவை பல திரட்டிகளில் இணைக்க விரும்புபவர்களுக்கான பக்கம் இது. பதிவர்கள் தங்கள் நேரத்தை மிச்சம் செய்ய உதவக்கூடும். இந்தப் பக்கத்தில் தொழிற்நுட்ப ரீதியில் இணக்கமான சில திரட்டிகள் உள்ளது அதில் மிக குறைந்த நேரத்தில் அதிக திரட்டிகளில் இணைக்கும் படி பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் மற்றவருக்கும் அறிமுகப்படுத்துங்கள்

நேரடியாக பிளாக்கர் தளத்தில் இணைக்க
Sample:




மகிழ்ச்சியை இன்ட்லியிலும் பகிர்ந்துக் கொள்ளலாம்.


தொடர்புக்கு: