அக்.12,
புதிய முயற்சியாக பிளாக்கர் தளங்கள் சுமார் 7000த்தின் மறுமொழிகளை திரட்டப்பட்டுள்ளது. தனி நபர் பிளாக்கர் முகவரியில் அண்மையில் பதிவு செய்த எல்லா தள மறுமொழிகள் மற்றும் குறிப்பிட்ட ஒரு தளத்தில் பதிவு செய்த மறுமொழிகள் என்று இருவகையான திரட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னகத்தே எந்த சேமிப்பானும் இல்லாததால் ஒவ்வொரு  முறையும் இந்த திரட்டி புத்தம் புதியதாக மறுமொழிகளைத் திரட்டும் அதனால் அதிகபட்சமாக இரண்டு நிமிடம் வரை தேடுதல் இருக்கலாம்.[முதல் முறை மட்டும்] 
http://tamilpoint.blogspot.com/p/comments.html
இதில் உள்ளபடியே முன்னது பொதுவான அண்மைய மறுமொழிகளைத் திரட்டும். ஏறக்குறைய அனைத்து தளங்களின் கடைசி 500 மறுமொழிகள் அலசப்பட்டு உங்கள் மறுமொழியை மட்டும் பட்டியலிடும்.
பின்னது ஒரு குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் இட்டுள்ள மறுமொழிகளில் கடைசி 2000 மறுமொழிகள் அலசப்பட்டு பிரிக்கப்படும்.

இந்த இரண்டும் தற்போது தமிழ்ப் புள்ளி தள வழியில் பயன்படுத்துமாறு உள்ளது. விரைவில் செய்தி ஓடை வடிவில் உங்கள் கூகிள் ரீடரில் அலங்கரிக்கப் படும்.
மேலும்  சில வசதிகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த மறுமொழித் திரட்டிப் பற்றிய ஆலோசனைகள் வரவேற்க்கப் படுகின்றன.
https://www.blogger.com/comment.g?blogID=5461158166291305315&pageID=719721591089161920